தேவையானவை:
- பருப்பு 2 கப் (எந்த பருப்பு வேண்டுமானாலும்),
- பொடியாக நறுக்கிய பாலக் கீரை ஒரு கப்,
- பொடியாக நறுக்கிய குடமிளகாய் அரை கப்,
- பச்சை மிளகாய் 3,
- கரம் மசாலாதூள் ஒரு டீஸ்பூன்,
- கடுகு, சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு,
- மாங்காய் துண்டு (பெரியது) 1,
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பருப்புகளையும், மாங்காயையும் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். (குழைய வேண்டாம்). கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் வெடித்ததும், குடமிளகாய் போட்டு வதக்கி, 2 நிமிடம் கழித்து கரம் மசாலாதூள் போட்டு கிளறவும். வெந்த பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிடவும்.
குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை சேர்க்கலாம். பருப்புகளுக்கு பதிலாக முளைகட்டிய பயறும் சேர்க்கலாம். கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்தும் இந்த தால் செய்யலாம்.