தேவையானவை:
- புடலங்காய் (சிறியதாக) 2 ,
- கடலை மாவு ஒன்றரை கப்,
- இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
- மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன்,
- ஆப்ப சோடா ஒரு சிட்டிகை,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய:
- உருளைக்கிழங்கு 2,
- பெரிய வெங்காயம் 1,
- பச்சை மிளகாய் 2,
- இஞ்சி 1 துண்டு.
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- கடுகு கால் டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசியுங்கள். வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். புடலங்காயை கழுவி, வட்டமாக சிறு துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டெடுங்கள். அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடையுங்கள். கடலை மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கரையுங்கள். மிதமான தீயில் எண்ணையைக் காய வைத்து, புடலங்காய் துண்டுகளை மாவில் போட்டெடுத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.