தேவையானவை:
- புடலங்காய் கால் கிலோ,
- பெரிய வெங்காயம் 1,
- தக்காளி 1,
- வரமிளகாய் 2,
- கசகசா ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- தேங்காய் துருவல் கால் மூடி,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- கறிவேப்பிலை,
- மல்லி இலை தலா சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: புடலங்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வரமிளகாய், ஊறவைத்த கசகசா, தேங்காயை அரைக்கவும். சீரகத்தை எண்ணெயில் போட்டுப் பொரித்து வெங்காயம், தக்காளி, புடலங்காயை வதக்கவும். காய் வெந்ததும் உப்பு, அரைத்த மசால் சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லி இலை தூவவும்.