...

பேபிகார்ன் பஜ்ஜி

தேவையானவை:

  • பேபிகார்ன்  12,
  • கடலை மாவு  1 கப்,
  • அரிசிமாவு  1 டீஸ்பூன்,
  • கார்ன்ஃப்ளவர்  1 டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  தேவைக்கு,
  • ஆப்ப சோடா  சிட்டிகை

அரைக்க: பச்சை மிளகாய்  3, இஞ்சி  1 துண்டு, பூண்டு  3 பல்.

செய்முறை: பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள். மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.