தேவையானவை:
- துவரம்பருப்பு கால் கப்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- தக்காளி 1,
- புளி கொட்டைப்பாக்கு அளவு,
- அன்னாசிப்பழ துண்டுகள் கால் கப்,
- தேங்காய்ப்பால் ஒரு டேபிள்ஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்.
ரசப்பொடிக்கு:
- தனியா 3 டீஸ்பூன்,
- துவரம்பருப்பு அரை டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 4,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- எண்ணெய் கால் டீஸ்பூன்.
தாளிக்க: நெய் கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: எண்ணெயைக் காயவைத்து, பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை பொடி யாக நறுக்கி அரை கப் தண்ணீரில் வேக விடவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். உப்பு, பெருங்காயத்தூள் போடவும். கொதித்தவுடன் பொடித்து வைத்துள்ள மசாலாவை போட்டு, வேக வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன், கடைசியாக அன்னாசிப்பழ துண்டுகளைச் சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து இறக்கவும்.