பொரித்த ரசம்

தேவையானவை:

  • துவரம்பருப்பு  கால் கப்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • எலுமிச்சம்பழம்  1,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்.

வறுத்தரைக்க:

  • உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மிளகு  அரை டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  3,
  • எண்ணெய்  அரை டீஸ்பூன்,
  • தேங்காய் துருவல்  ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய்  அரை டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை: முதலில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். அதோடு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சிறிது ஆறியதும் எலுமிச்சம்பழத்தை பிழிந்து கலக்கி விடவும்.