தேவையானவை:
- கடலைமாவு கால் கப்,
- பெரிய வெங்காயம் 1,
- மல்லித்தழை ஒரு கைப்பிடி,
- பச்சை மிளகாய் 4,
- கெட்டித் தயிர் ஒரு கப்,
- புளித்த தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு திட்டமாக, எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை 2 ஆர்க்கு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கடலைமாவுடன் கலக்கவும். திட்டமாக உப்பு, கொஞ்சம் தயிர் சேர்த்துத் தேவையான தண்ணீரும் கலந்து மாவைப் பிசைந்து, கோலிக்காய் அளவு சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
பொரித்த போண்டாக்களைச் சூட்டுடன் தயிரில் போடவும். தயிரில் உப்புக் கலந்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துப் போட்டு பரிமாறவும். விருந்துகளுக்கு ஏற்றது இந்த விசேஷமான பச்சடி.