தேவையானவை:
- வேகவைத்து மசித்த துவரம்பருப்பு ஒரு கப்,
- தேங்காய்ப்பால் 2 கப்,
- வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்,
- கெட்டியான புளித்தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன்,
- கரம் மசாலாதூள் ஒரு டீஸ்பூன், சீரகம்,
- பெருங்காயத்தூள்,
- கறிவேப்பிலை,
- மல்லித்தழை சிறிதளவு,
- நெய் 2 டேபிள்ஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப.
செய்முறை: ஒரு கடாயில் வெந்த பருப்பையும் தேங்காய்ப் பாலையும் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம், புளித்தண்ணீர், கரம்மசாலா, உப்பு இவற்றை ருசிக்கேற்ப சேர்க்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பருப்பு கலவையில் கொட்டவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.