மசூர் பருப்பு தால்

தேவையானவை:

 • துவரம்பருப்பு  ஒரு கப்,
 • மசூர் பருப்பு  ஒரு கப்,
 • வெள்ளரிக்காய் அல்லது தோசைக்காய்  1,
 • பெரிய வெங்காயம்  2,
 • பூண்டு  6 அல்லது 7 பல்,
 • இஞ்சி  ஒரு துண்டு,
 • தக்காளி  4,
 • கறிவேப்பிலை, மல்லித்தழை  தலா சிறிதளவு,
 • பச்சை மிளகாய்  5,
 • நெய்  5டீஸ்பூன்,
 • உப்பு  ருசிக்கேற்ப,
 • எலுமிச்சம்பழச் சாறு  ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய்  2 டீஸ்பூன், சீரகம்  ஒரு டீஸ்பூன், கடுகு  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெள்ளரி, வெங்காயம், பூண்டு, மல்லித்தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். தக்காளியைப் பெரிய துண்டுகளாக்கவும். குக்கரில், இரண்டு பருப்புகளோடு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை, சிறிது நெய் சேர்த்து வேகவிடவும். ஒரு கடாயில் மீதி நெய்யை விட்டு, சூடானதும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் வெள்ளரி துண்டுகளைப் போடவும். சிறிது மிருதுவானவுடன், தக்காளி துண்டுகளைப் போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறவும். கடாயில் நெய் பிரிந்து வரும்போது, வெந்த பருப்பைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். மல்லித்தழை தூவி, எலுமிச்சை சாறு சேர்த்து, கிளறி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X