தேவையானவை: பெரிய அளவில் மரவள்ளிக்கிழங்கு – 1, மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 2 கப்.
செய்முறை: கிழங்கின் தோலை நீக்கவும். பின் அவற்றை மெல்லிய தகடுகளாக அரிவாள்மனையில் நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைக்கவும். கிழங்கை 2 அல்லது 3 முறை அதிலிருக்கும் பால் போகுமாறு தண்ணீரில் அலசி எடுத்து நீர் வடிந்ததும் சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு சிவந்து விடாமல் பார்த்து, மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும். (அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்). சிறிது சூடு ஆறியதும் சிப்ஸின் மேல் மிளகாய்தூள் + உப்பு தூவி குலுக்கிவிடவும். இதை டப்பாக்களில் போட்டு மூடி வைத்தால் தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம்.