தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு & 1, தேங்காய்ப்பால் (கெட்டியான, முதல் பால்) & ஒரு கப், இரண்டாம் தேங்காய்ப்பால் & ஒரு கப், பச்சை மிளகாய் & 4, பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 1, இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு, மல்லித்தழை & சிறிதளவு, உப்பு & சுவைக்கேற்ப.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். முதல் தேங்காய்ப்பாலை தனியாக வைக்கவும். இரண்டாம் பாலில் மரவள்ளிக்கிழங்கை வேக விடவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய் கீறிப் போட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி&பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும், பாலில் வேகவைத்த மரவள்ளியை இதில் போட்டு கிளறவும். கடைசியாக, முதல் தேங்காய்ப்பாலை சேர்த்துக் கலந்து (கொதிக்க விடாமல்), மல்லித்தழை தூவி இறக்கவும். இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு சைட்&டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம். சத்து மிகுந்தது. சர்க்கரைவள்ளிக்கிழங்கிலும் இதை செய்யலாம்.