...

மினி ஆலு மசாலா

தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு – 12, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, பட்டை – சிறிது, ஏலக்காய் – 1, கிராம்பு – 1 (மூன்றும் சேர்ந்து பொடித்தது) – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, வேகவைத்த சின்ன உருளை – 2, மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன், புளி – அரை நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – கால் டம்ளர், பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் சேர்த்து பொடித்த பொடி, சீரகம், மஞ்சள்தூள், வேகவைத்த 2 உருளைக்கிழங்கு (தோல் உரித்தது), வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். புளி + உப்பை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, தக்காளியையும் சேர்த்து உருத்தெரியாமல் வதக்கவும். பின் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி பிறகு புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த கிழங்கை அத்துடன் சேர்த்து கிளறி சற்று கெட்டியானதும் இறக்கி, பொடியாக அரிந்த வெங்காயம் + மல்லித்தழை தூவி பரிமாறவும். இது சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்-டிஷ் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.