தேவையானவை:
- மைதா மாவு ஒன்றேமுக்கால் கப்,
- ரவை கால் கப்,
- நெய் கால் கப்,
- உப்பு ஒரு சிட்டிகை,
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு,
- பால் இரண்டரை கப்,
- கண்டென்ஸ்டு மில்க் கால் கப்,
- சர்க்கரை கால் கப்,
- கார்ன்ஃப்ளார் ஒரு டீஸ்பூன்,
- உலர்பழங்கள் சிறிதளவு,
- குங்குமப்பூ ஒரு சிட்டிகை,
- ஏலக்காய்தூள் ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, ரவை, நெய் மூன்றையும் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். அந்த மாவை, பெரிய சப்பாத்திகளாகத் தேய்த்து, டைமன் அல்லது நட்சத்திரம் போன்ற விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு சுண்டக் காய்ச்சவும். அத்துடன் கண்டென்ஸ்டு மில்க்கையும் சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். கார்ன்ஃப்ளாரை, சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். நன்கு கெட்டியானபின், ஏலக்காய்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கிவைக்கவும். பரிமாறும் சமயத்தில் பொரித்துவைத்த பூரிகளின் மேல், கெட்டியான பாலை ஊற்றி, அதன் மேலே உலர்பழங்களைத் தூவி அலங்கரித்துக் கொடுக்கவும். விருந்துகளுக்கு ஏற்ற, கிராண்டான அயிட்டம் இது.