மிளகு ரசம்

தேவையானவை:

  • புளி  எலுமிச்சம்பழ அளவு, உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்.

ரசப்பொடிக்கு:

  • துவரம்பருப்பு  2 டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  4,
  • கறிவேப்பிலை  சிறிது.

தாளிக்க: நெய்  கால் டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது. செய்முறை: ரசப்பொடிக்கென கொடுத்துள்ளவற்றைப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர்விட்டு அதில் உப்பு, புளி இரண்டையும் போடவும். பிறகு பெருங்காயத்தூளை சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் பொடித்து வைத்துள்ள ரசப்பொடியை போட்டு கொதித்து மேலே வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து கொட்டவும். உடம்பு வலிக்கு மிகவும் ஏற்ற ரசம்.