...

மேத்தி பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • மேத்தி (வெந்தயக் கீரை) ஆய்ந்தது  ஒரு கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • நெய் அல்லது எண்ணெய்  ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • மிளகாய்தூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக்கீரையை சுத்தம் செய்து மற்ற எல்லாப் பொருட்களுடனும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ஒரு ஈரமான துணியில் மாவை வைத்து சுற்றி, 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு, பூரிகளாக திரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.