தேவையானவை:
- மைதாமாவு கால் கப்,
- சர்க்கரை ஒரு கப்,
- பால் 3 கப்,
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு,
- முந்திரிப்பருப்பு,
- கிஸ்மிஸ் தேவைக்கேற்ப.
- ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்,
- பச்சைக் கற்பூரம் வாசனைக்கு சிறிது.
செய்முறை: மைதாமாவை பூரி செய்யும் பக்குவத்தில் பிசைந்து கொள்ளுங்கள். அந்த மாவை சிறிய பூரிகளாக தேய்த்து, அதில் டைமன் வடிவில் சிறிது சிறிதாக வெட்டி அதை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பாலை நன்கு கொதிக்கவைத்து, அதில் சர்க்கரையை போட்டு பால் நன்கு சுண்டக் காய்ந்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் வறுத்து போடுங்கள். கடைசியில் மைதா பிஸ்கெட்களை லேசாக உடைத்து பாயசத்தில் போட்டு, சிறிது பச்சை கற்பூரமும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும். மேலே சிறிது குங்குமப்பூவை விரும்பினால் தூவிக் கொள்ளலாம்.