மொடக்கத்தான் ரசம்

தேவையானவை:

  • புளி  எலுமிச்சம்பழ அளவு,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மொடக்கத்தான் கீரை  கால் கப்.

ரசப்பொடிக்கு:

  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயம்  ஒரு சிறிய துண்டு,
  • காய்ந்த மிளகாய்  3,
  • எண்ணெய்  கால் டீஸ்பூன்.

தாளிக்க: நெய்  கால் டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது. செய்முறை: ரசப்பொடிக்குத் தேவையான பொருட்களை கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். மொடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கவும். புளியை 2 கப் நீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ரசப்பொடியையும் போடவும். இன்னொரு கடாயில் நெய்யில் கடுகு தாளித்து அதில் மொடக்கத்தான் கீரையை வதக்கி ரசத்தில் போட்டு இறக்கவும். இது சிறிது கசப்பாக இருக்கும். ஆனால் வாயுத் தொந்தரவுக்கு மிகவும் நல்லது.