தேவையானவை:
- கடைந்த கெட்டியான மோர் ஒன்றரை கப்,
- உப்பு ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.
அரைக்க:
- துவரம்பருப்பு 2 டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 2,
- வெந்தயம் அரை டீஸ்பூன்,
- எண்ணெய் அரை டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை, எண்ணெயில் வறுத்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். மோரில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கடைந்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் நன்றாகக் கலக்கி வைக்கவும். தாளிக்க தேவையில்லை. அடுப்பில் வைக்காமலே ருசிபட செய்யக்கூடிய மோர் ரசம் இது.