தேவையானவை:
- துவரம்பருப்பு கால் கப்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- தக்காளி 1, உப்பு ஒரு டீஸ்பூன்,
- எலுமிச்சம்பழம் பாதி.
ரசப்பொடிக்கு:
- தனியா 3 டீஸ்பூன்,
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 2.
தாளிக்க: எண்ணெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை சிறிது, பச்சைமிளகாய் (கீறியது) 2.
செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ரசப்பொடிக்கான பொருட்களை வறுக்காமல் பச்சையாக பொடித்துக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர்விட்டு தக்காளியை வேக விடவும். உப்பையும் போடவும். பிறகு பெருங்காயத்தூள், ரசப்பொடி இரண்டையும் போடவும். சிறிது நேரம் கொதித்ததும் வேகவைத்துள்ள பருப்பைப் போட்டு நுரைக்க பொங்கி வந்தவுடன் இறக்கி கடுகு, கறிவேப்பிலை, மல்லி தாளிக்கவும். அதனுடனேயே பச்சைமிளகாயையும் சேர்த்து தாளித்து கொட்டவும். சிறிது ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும். குறிப்பு: சூடாக இருக்கும்போதே எலுமிச்சம்பழச்சாறை விட்டால் சில நேரங்களில் கசந்துவிடும்.