வதக்கி செய்யும் தக்காளி சட்னி

தேவையானவை:

  • பழுத்த தக்காளி   4,
  • வெங்காயம்   2,
  • பூண்டு (விருப்பப்பட்டால்)   4 பல்,
  • மிளகாய்தூள்   ஒரு டீஸ்பூன்,
  • உப்பு   தேவையான அளவு.

அரைத்துக்கொள்ள:

  • தேங்காய் துருவல்   ஒரு டேபிள்ஸ்பூன்,
  • சோம்பு   கால் டீஸ்பூன்,
  • உடைத்த பொட்டுக்கடலை   2 டீஸ்பூன்.
  • தாளிக்க:
  • எண்ணெய்   3 டேபிள்ஸ்பூன்,
  • சோம்பு   கால் கறிவேப்பிலை   சிறிது. கடுகு   அரைடீஸ்பூன்,

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல், சோம்பு, பொட்டுக்கடலையை அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து, சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மிளகாய்தூள், தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி, அரைத்த விழுதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள்.