தேவையானவை:
- பிஞ்சு வெண்டைக்காய் கால் கிலோ,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- புளி ஒரு சுளை, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- வெங்காய வடகம் 2,
- கறிவேப்பிலை,
- மல்லித்தழை தலா சிறிதளவு,
- உப்பு திட்டமாக, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
- தேங்காய் துருவல் கால் மூடி,
- சீரகம் கால் டீஸ்பூன்.
செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கி, பிறகு வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். (காய் நன்கு வதங்கினால்தான் பச்சடி ருசியாக இருக்கும். இல்லை என்றால் ‘கொழகொழ’வென்று இருக்கும்). புளியைக் கரைத்து விட்டு, மஞ்சள்தூள் போடவும். காய் வெந்ததும் தேங்காய், சீரகம் அரைத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, மல்லித்தழை நறுக்கிச் சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, வடகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்