தேவையானவை: கோதுமை மாவு 2 கப், உப்பு சுவைக்கேற்ப, வறுத்த வேர்க்கடலை கால் கப், வறுத்த எள்ளு ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையையும் எள்ளையும் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும். அவற்றுடன் உப்பு, மிளகாய்தூள் கலந்துகொள்ளவும். இதுதான் பூரணம். கோதுமை மாவை சிறு செப்புகளாகச் செய்து, அதில் வேர்க்கடலைப் பொடியை ஒவ்வொரு டீஸ்பூன் வைத்து, மீண்டும் தேய்த்து, எண்ணெயில் பொரிக்கவும்.