தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரை எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு. டீஸ்பூன்,
ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு: தேங்காய் துருவல் & அரை கப், முந்திரிப்பருப்பு & 6, சர்க்கரை & அரை கப், ஏலக்காய்தூள் அல்லது வெனிலா எசன்ஸ் & சிறிதளவு.
செய்முறை: தேங்காயுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல வரும்வரை கிளறி, வெனிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள். கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். சிறிதளவு மாவு எடுத்து கிண்ணம் போல செய்து, பூரணத்தை உள்ளே வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடுங்கள். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் & நெய் கலவை விட்டு வேகவிட்டெடுங்கள்.