ஸ்வீட் பனீர் ரோஸ் பூரி

தேவையானவை:

  • மைதா  2 கப்,
  • உப்பு  ஒரு சிட்டிகை,
  • பனீர் (துருவியது)  கால் கப்,
  • பொடித்த சர்க்கரை  6 டேபிள்ஸ்பூன்,
  • ஏலக்காய்  ஒரு டீஸ்பூன்,
  • ரோஸ் எசன்ஸ்  சில துளிகள்,
  • நெய்  ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு, நெய், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, ஈரத்துணியில் சுற்றிவைக்கவும். பனீருடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து மசிக்கவும். அத்துடன் சில துளிகள் ரோஸ் எசன்ஸ் அல்லது பன்னீர் சேர்த்துக் கலந்துவைக்கவும். மைதா மாவில் முன் சொன்னது போல செப்பு செய்து, உள்ளே பனீர் பூரணத்தை வைத்து மூடி, மீண்டும் தேய்த்து எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.