தேவையானவை:
- தக்காளி 1,
- புளி எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்.
வறுத்தரைக்க:
- கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 2,
- நறுக்கிய இஞ்சி துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன்,
- நெய் கால் டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி சிறிது, வெல்லம் கொட்டைப்பாக்கு அளவு.
செய்முறை: இஞ்சியைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் நெய்யில் வறுத்து, பிறகு இஞ்சியையும் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு புளியை ஒரு கப் நீரில் நன்கு கரைத்து வடிகட்டி தக்காளி நீரில் ஊற்ற வேண்டும். அதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, அரைத்த விழுதையும் போட்டு, கொதித்தவுடன் துவரம்பருப்பை அதில் சேர்த்து சிறிது வெல்லத்தையும் போட்டு நுரைத்து பொங்கிவரும் சமயத்தில் இறக்கி கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து கொட்டவும். பித்தத்துக்கு நல்லது இந்த இஞ்சி ரசம்.