தேவையானவை:
- துவரம்பருப்பு,
- பாசிப்பருப்பு,
- கடலைப்பருப்பு,
- உளுத்தம்பருப்பு தலா 2 டேபிள்ஸ்பூன்,
- பூண்டு 2 பல்,
- சீரகம் ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- உப்பு ருசிக்கேற்ப,
- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,
- இஞ்சி ஒரு துண்டு,
- பச்சை மிளகாய் 1,
- நெய் 2 டீஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு,
- எலுமிச்சம்பழச் சாறு சிறிதளவு.
செய்முறை: எல்லா பருப்புகளையும் வேகவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பாதியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அரைத்த பருப்பை சேர்த்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கலாம். அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.