தேவையானவை:
- கடலைப்பருப்பு,
- வெள்ளை காராமணி (இரண்டும் சேர்த்து) ஒரு கப்,
- பெரிய வெங்காயம் 1,
- உருளைக்கிழங்கு 1,
- காய்ந்த மிளகாய் 3,
- சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்,
- தனியாதூள் அரை டேபிள்ஸ்பூன்,
- கறிவேப்பிலை பொடி அரை டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்,
- உப்பு,
- எண்ணெய்,
- சர்க்கரை தலா சிறிதளவு,
- கிராம்பு, ஏலக்காய்,
- பட்டை (மூன்றும் சேர்த்துப் பொடித்தது) அரை டேபிள்ஸ்பூன்,
- மல்லித்தழை சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போடவும். ஒரு நிமிடம் கழித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும். தனியாதூள், மல்லித்தழை, சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் + கழுவி வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். குக்கரை மூடி பருப்பை வேக விடவும். பருப்பு வெந்தவுடன் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு தூளை சேர்க்கவும். உப்பு போட்டு மிகவும் நிதானமான தீயில் வைக்கவும். கிரேவி கெட்டியாகும் வரை கிளறவும். சாதத்தில் நெய்போட்டு, இந்த பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.