தேவையானவை:
- புளி எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய கண்டதிப்பிலி இலை கால் கப்.
ரசப்பொடிக்கு:
- தனியா 2 டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 3,
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- எண்ணெய் கால் டீஸ்பூன்.
தாளிக்க: நெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன்.
செய்முறை: சீரகம் தவிர மற்றவற்றை வாசனை வரும் வரை வறுத்து கடைசியாக சீரகத்தைப் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு, கண்டதிப்பிலி இலைகளை கடுகுடன் வதக்கி ரசத்தில் சேர்த்து, இறக்கிவைக்கவும். சளி பிடித்தவர்களுக்கு ஏற்ற ரசம் இது.