தேவையானவை:
- பச்சரிசி ஒரு கப்,
- கத்தரிக்காய் 4,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
அரைக்க:
- தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
- சின்ன வெங்காயம் 6,
- இஞ்சி ஒரு துண்டு,
- பூண்டு 3 பல்,
- பச்சை மிளகாய் 4,
- தனியா ஒரு டீஸ்பூன்,
- புதினா,
- மல்லி தலா சிறிதளவு.
தாளிக்க: கடுகு அரைடஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். கத்தரிக்காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, மஞ்சள்தூளையும் கத்தரிக்காயையும் சேருங்கள். 5 நிமிடம் வதக்கிய பிறகு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறுங்கள்.