...

கொத்துக் கடலை தாளிதம்

தேவையானவை:

  • கருப்பு கொத்துக்கடலை  ஒரு கப்,
  • பெரிய வெங்காயம்  1,
  • தக்காளி  1,
  • இஞ்சிபூண்டு விழுது  ஒரு டேபிள்ஸ்பூன் ,
  • பச்சை மிளகாய்  2,
  • மல்லித்தழை  2 டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  அரை டீஸ்பூன்,
  • சீரகம்  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு,
  • வெண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • நெய்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். குக்கரில், கடலை + தேவையான தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வேகவிடவும். இதன் நடுவில் கடாயில் நெய் ஊற்றி சீரகத்தை போடவும். சீரகம் வெடிக்க ஆரம்பித்ததும் பூண்டு, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுதுபோட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும். இப்பொழுது, தக்காளியை போட்டு 3 நிமிடங்களுக்கு வதக்கவும். பெருங் காயம், கரம்மசாலா, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, மிளகாய் தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறவும். குக்கரை திறந்து, வெந்த கடலையுடன், கடாயில் வதக்கிய மசாலாவையும் போட்டு, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்பொழுதுதான் மிகவும் ருசியாக இருக்கும். மசியல் ரொம்பவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் நீரை கொதிக்க வைத்து சேர்க்கவும். சூடாக, சப்பாத்தியுடனோ, சாதத்துடனோ பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.