தேவையானவை:
- சேமியா 1 கப்,
- சர்க்கரை ஒன்றரை கப்,
- நெய் கால் கப்,
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
- ஆரஞ்சு ரெட் கலர் ஒரு சிட்டிகை,
- முந்திரிப்பருப்பு 10,
- திராட்சை 10,
- ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்.
செய்முறை: எண்ணெய், நெய்யில் பாதி, பாதி எடுத்து, இரண்டையும் காய வைத்து, முந்திரி, திராட்சை சேர்த்து 1 நிமிடம் வறுத்தெடுங்கள். பின்னர் சேமியாவை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை கப் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து, நன்கு வேக விட்டு தீயை குறைத்து, மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடுங்கள். மூடியை திறந்து சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கெட்டியாகும் வரை கிளறி, கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.