தேவையானவை:
- தக்காளி 3,
- புளி கொட்டைப்பாக்கு அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.
ரசப்பொடிக்கு:
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது,
- காய்ந்த மிளகாய் 4,
- தனியா 3 டீஸ்பூன்.
தாளிக்க: நெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கொத்துமல்லி சிறிதளவு.
செய்முறை: ரசப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். தக்காளியை கொதித்த நீரில் போட்டு 5 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். புளியை ஒரு கப் நீரில் நன்றாகக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பையும் அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பொடித்த ரசப்பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் பின்னர் இறக்கி நெய்யில் கடுகு, கொத்துமல்லி தாளிக்கவும்.