தேவையானவை:
- மசூர் பருப்பு ஒன்றரை கப்,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- பச்சை மிளகாய் 4 அல்லது 5 (அல்லது காரத்துக்கு ஏற்றவாறு),
- பூண்டு 2 பல்,
- மல்லித்தழை சிறிதளவு,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன , நெய் 2, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்.
செய்முறை: பருப்பை மஞ்சள்தூளுடன் சேர்த்து குழையவிடாமல் வேகவிடவும். கடாயில் நெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு வெடிக்க விடவும். பிறகு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு வெந்த பருப்பை போட்டு, உப்பையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும். நடுவில் கிளறிவிடவும். கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து பரிமாறவும்.