தேவையானவை:
- புளி சிறிய எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்.
ரசப்பொடிக்கு: திப்பிலி குச்சி 4 துண்டுகள், காய்ந்த மிளகாய் 4, மிளகு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.
தாளிக்க: நெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: பொடிக்கு தேவையானவற்றை கால் டீஸ்பூன் நெய்விட்டு, வறுத்து பொடித்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு பொடியைப் போட்டு, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். (திப்பிலிகுச்சி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)