தேவையானவை:
- அரிசி ஒன்றேகால் கப்,
- வறுத்த உளுத்தம்பருப்பு கால் கப்,
- துவரம்பருப்பு அரை கப்,
- கடலைப்பருப்பு கால் கப்,
- காய்ந்த மிளகாய் 5,
- பெருங்காயம் சிறிதளவு.
செய்முறை: மேலே கூறப்பட்டிருக்கும் பொருட்களை நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது, இந்தப் பொடியை பஜ்ஜி சுடுவதற்கு ஏற்ற பதத்தில் கரைத்து, விருப்பப்பட்டால் சிறிது சமையல் சோடா சேர்த்து, சீவிய காய்களை மாவில் நனைத்து காயும் எண்ணெயில் போட்டு பஜ்ஜி சுடலாம்.