தேவையானவை:
- துவரம்பருப்பு,
- வெள்ளை கொண்டைக்கடலை,
- பாசிப்பருப்பு, மசூர்தால்,
- உளுத்தம்பருப்பு எல்லாம் தலா கால் கப்,
- மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 10,
- பூண்டு 10 பல்.
தாளிக்க: பெரிய வெங்காயம் 1, பிரிஞ்சி இலை சிறிது, தக்காளி 1, எண்ணெய் தேவையான அளவு, மல்லித்தழை சிறிது. செய்முறை: எல்லா பருப்புகளையும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுக்கவும். மறுநாள், குறைந்த தீயில் தேவையான நீர் சேர்த்து, பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும். மிளகாயையும், பூண்டையும் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வெந்த பருப்புடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, கடைசியில் பருப்பையும் சேர்த்து ஒரு தடவை கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.