தேவையானவை:
- துவரம்பருப்பு கால் கப்,
- பிஞ்சு முருங்கைக்காய் துண்டுகள் கால் கப்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- எலுமிச்சம்பழம் பாதி.
ரசப்பொடிக்கு: தனியா 3 டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4.
தாளிக்க: நெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை சிறிது. செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுக்காமல் பொடித்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் முருங்கைப் பிஞ்சு துண்டுகளைப் போட்டு வேக விடவும். அதில் உப்பு போட்டு, வெந்த துவரம்பருப்பை ஊற்றி பொடியையும் போட்டு கொதிக்கவிட்டு, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து இறக்கவும். கடைசியில் எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.