தேவையானவை:
- தக்காளி 1, புளி கொட்டைப்பாக்கு அளவு,
- முருங்கைக் குச்சி (சற்று நீளமானதாக) 10,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்.
ரசப்பொடிக்கு:
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- மிளகு ஒரு டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 3,
- கறிவேப்பிலை ஒரு கொத்து,
- எண்ணெய் கால் டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்த பிறகு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை இரண்டையும் போட்டு சூடு ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர் விட்டு கரைத்து வடிகட்டி வைக்கவும். முருங்கைக் குச்சிகளை அதில் போட்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து வேக விடவும். தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ரசப்பொடியைப் போட்டு, ரசம் கொதித்தவுடன் வேக வைத்த பருப்பை ஊற்றி, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.