வாழைப்பழ சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & ஒரு கப், வாழைப்பழம் & 1, சர்க்கரை & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & ஒரு சிட்டிகை, நெய் & 2 டீஸ்பூன், எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், நெய் கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் & நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள். இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி. வெந்நீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், தண்ணீர் & ஒன்றரை கப், நல்லெண்ணெய் & 2 டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, நெய் & எண்ணெய் கலவை & தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரை நன்கு சூடாக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். மாவை சிறிது சிறிதாக தண்ணீரில் தூவி, நன்கு பிசையுங்கள். சுடவைத்த தண்ணீர் போதவில்லை என்றால், மேலும் சிறிது தண்ணீர் சுடவைத்து சேர்த்துப் பிசையுங்கள். நன்கு பிசைந்து வழக்கம்போல சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *