தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், கடலை மாவு & ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன், வெந்தயக் கீரை & 2 கட்டு, மாங்காய் தூள் & 2 டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய்&நெய் கலவை & தேவையான அளவு.
செய்முறை: வெந்தயக் கீரையை இலைகளாக நறுக்கிக்கொண்டு, தண்ணீரில் அலசி, சுத்தம் செய்துகொள்ளுங்கள். கீரையுடன், ஒரு டீஸ்பூன் நெய், கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மாங்காய் தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் கலந்துவைத்துக் கொள்ளுங்கள். பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்&நெய் கலவையை விட்டு வேகவையுங்கள்.
குறிப்பு: எண்ணெய்&நெய் கலவை சப்பாத்தி சுடுவதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.