...

சேமியா கேசரி

தேவையானவை:

  • சேமியா  1 கப்,
  • சர்க்கரை  ஒன்றரை கப்,
  • நெய்  கால் கப்,
  • எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • ஆரஞ்சு ரெட் கலர்  ஒரு சிட்டிகை,
  • முந்திரிப்பருப்பு  10,
  • திராட்சை  10,
  • ஏலக்காய்தூள்  1 டீஸ்பூன்.

செய்முறை: எண்ணெய், நெய்யில் பாதி, பாதி எடுத்து, இரண்டையும் காய வைத்து, முந்திரி, திராட்சை சேர்த்து 1 நிமிடம் வறுத்தெடுங்கள். பின்னர் சேமியாவை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை கப் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து, நன்கு வேக விட்டு தீயை குறைத்து, மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடுங்கள். மூடியை திறந்து சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கெட்டியாகும் வரை கிளறி, கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.