தேவையானவை:
- துவரம்பருப்பு ஒரு கப்,
- மாங்காய் (காய்வெட்டாக) 1,
- மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு ஒன்றரை டீஸ்பூன்,
- பெரிய வெங்காயம் 1,
- பூண்டு 3 பல்,
- கடுகு ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 1 அல்லது 2,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிதமான தீயில் வைத்து, அரைவேக்காடாக பருப்பை வேகவைக்கவும். மாங்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து நன்றாக கூழாக ஆகும் வரை வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாய் துண்டுகள், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். கறிவேப்பிலை கிள்ளி போட்டு, மாங்காய் பருப்பில் சேர்க்கவும். புளிப்பும் காரமும் சேர்ந்து சூப்பராக இருக்கும் இந்த தால்.