தேவையானவை:
- புளி எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பூண்டு 4 பல்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- மிளகு அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 4.
தாளிக்க: எண்ணெய் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: புளியை 2 கப் நீரில் கரைத்து வடிகட்டி உப்பு போட்டு கொதிக்கவிடவும். பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பிறகு காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு இவற்றை கரகரப்பாக அரைத்து சேர்க்கவும். கடைசியாக எண் ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.