தேவையானவை:
- துவரம்பருப்பு கால் கப்,
- பெங்களூர் தக்காளி 1,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- புளி நெல்லிக்காய் அளவு,
- தேங்காய்ப்பால் ஒரு டீஸ்பூன்,
- வெல்லம் சிறிது,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் வறுத்துக் கொள்ளவும். பின்னர் சீரகத்தை சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இதுதான் மைசூர் ரசப்பொடி.
பருப்பை குழைய வேகவிடவும். தக்காளியை பொடியாக நறுக்கி, கால் கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை நன்றாக கரைத்து வடிகட்டி தக்காளி நீரில் சேர்த்து, உப்பு போடவும். புளித்தண்ணீர் கொதித்ததும் அதில் பெருங்காயத்தூள் போட்டு, ரசப்பொடியையும் சேர்த்து, கொதித்ததும் பருப்பை நன்றாகக் கடைந்து அதில் ஊற்றவும். கொதித்து வரும்போது வெல்லத்தையும் தேங்காய்ப்பாலையும் சேர்த்து, நுரைத்து பொங்கி வரும்போது இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளிக்கவும்.