...

கத்தரிக்காய் சாதம்

தேவையானவை:

  • பச்சரிசி  ஒரு கப்,
  • கத்தரிக்காய்  4,
  • மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,  உப்பு தேவையான அளவு.

அரைக்க:

  • தேங்காய் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • சின்ன வெங்காயம்  6,
  • இஞ்சி  ஒரு துண்டு,
  • பூண்டு  3 பல்,
  • பச்சை மிளகாய்  4,
  • தனியா  ஒரு டீஸ்பூன்,
  • புதினா,
  • மல்லி  தலா சிறிதளவு.

தாளிக்க: கடுகு  அரைடஸ்பூன், எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். கத்தரிக்காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, மஞ்சள்தூளையும் கத்தரிக்காயையும் சேருங்கள். 5 நிமிடம் வதக்கிய பிறகு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.