அரைத்துவிட்ட பைனாப்பிள் ரசம்

தேவையானவை:

  • பழுத்த தக்காளி  1,
  • அன்னாசிப்பழ துண்டுகள்  கால் கப்,
  • புளி  கொட்டைப்பாக்கு அளவு,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • துவரம்பருப்பு  2 டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • தேங்காய்ப்பால்  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயம்  கால் டீஸ்பூன்.

ரசப்பொடிக்கு:

  • தனியா  2 டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  4,
  • எண்ணெய்  கால் டீஸ்பூன்.

தாளிக்க:

  • எண்ணெய்  கால் டீஸ்பூன்,
  • கடுகு  கால் டீஸ்பூன்,
  • கொத்துமல்லி,
  • கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை: தனியா முதல் மிளகாய் வரை அனைத்தையும் எண்ணெய் விட்டு வறுத்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும். பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அன்னாசிப்பழத் துண்டுகளை நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் நீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தக்காளியை அரை கப் நீர் விட்டு பொடியாக நறுக்கி வேக வைக்கவும். பிறகு புளித் தண்ணீரை ஊற்றி உப்புப் போடவும். சிறிது கொதிக்க ஆரம்பித்தவுடன் பொடியைப் போட்டு வெந்த பருப்பையும் போட்டு, பெருங்காயத்தூளையும் போடவும். பொங்கி வரும் சமயத்தில் அன்னாசிச் சாற்றை ரசத்தில் ஊற்றி இறக்கவும். எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, தாளிக்கவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X