...

ஆலு தால்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு  கால் கிலோ,
  • பாசிப்பருப்பு  அரை கப்,
  • தக்காளி  2,
  • பச்சை மிளகாய்  50 கிராம்,
  • மிளகு  2 டேபிள்ஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  2 டீஸ்பூன்,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • தனியாதூள்  ஒரு டீஸ்பூன்,
  • ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.