...

உருளைபருப்பு தால்

தேவையானவை:

  • துவரம் பருப்பு  ஒரு கப்,
  • உருளைக் கிழங்கு  1,
  • தக்காளி  1,
  • கறிவேப்பிலை  சிறிதளவு,
  • மிளகுத்தூள்  2 டீஸ்பூன்,
  • உப்பு  ருசிக்கேற்ப.

தாளிக்க: கடுகு, சீரகம், எண்ணெய்  சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பருப்புடன் தக்காளி, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போட்டு தாளித்து, பருப்பு கலவையில் கொட்டவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.