...

தக்காளி தால்

தேவையானவை:

  • துவரம்பருப்பு  ஒரு கப்,
  • தக்காளி  4,
  • பச்சை மிளகாய்  1,
  • மல்லித்தழை  சிறிதளவு,
  • மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன்,
  • உப்பு  ருசிக்கேற்ப, கறிவேப்பிலை  சிறிதளவு.

தாளிக்க: கடுகு  ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன், சீரகம்  ஒரு டீஸ்பூன், எண்ணெய்  2 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும், குக்கரில் துவரம்பருப்புடன் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பை போடவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், வெந்த பருப்பை சேர்த்து, தேவையான உப்பு, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். சூடான சாதத்துடனோ, புல்காவுடனோ சாப்பிட நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.