...

கண்டதிப்பிலி ரசம்

தேவையானவை:

  • புளி  எலுமிச்சம்பழ அளவு,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய கண்டதிப்பிலி இலை  கால் கப்.

ரசப்பொடிக்கு:

  • தனியா  2 டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  3,
  • துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • எண்ணெய்  கால் டீஸ்பூன்.

தாளிக்க: நெய்  கால் டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன்.

செய்முறை: சீரகம் தவிர மற்றவற்றை வாசனை வரும் வரை வறுத்து கடைசியாக சீரகத்தைப் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு, கண்டதிப்பிலி இலைகளை கடுகுடன் வதக்கி ரசத்தில் சேர்த்து, இறக்கிவைக்கவும். சளி பிடித்தவர்களுக்கு ஏற்ற ரசம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.